உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் IMF திட்டத்திலிருந்து இலங்கை விலகும் – பிரதி அமைச்சர்.!!!

இலங்கை 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து விலகவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஆரம்ப வரவுசெலவுத் திட்டங்கள் ஊடாக பல கட்டங்களாக சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்திலும் சுமார் 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுமார் 17,000 ரூபாவாக இருந்த அரச சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பளம் தொடர்பான அழுத்தங்கள் இன்றி அரச ஊழியர்கள் தமது கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு சம்பளத் திருத்தங்கள் அவசியமானவை என தெரிவித்த பிரதி அமைச்சர், நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அதிகபட்ச அளவிலேயே இந்த சம்பள உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2027ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னர் இலங்கை IMF திட்டத்திலிருந்து விலகி, மக்களுக்கு இதைவிட அதிக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215583

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time