அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மீண்டும் வீழ்ச்சி.!!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (29) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாக காணப்படுகின்றது.
கடந்த 27 ஆம் திகதி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.40 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 330.81 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிவடைந்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.