உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

“சூப்பர் முஸ்லிம்” என்ற பெயரில் அடிப்படைவாத கொள்கை ஒன்று முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாகி வருகிறது ; மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.!!!

வாலிபர்களை அடிப்படைவாதத்தில் இருந்து மீட்க தேவையான அனைத்தையும் செய்வோம் என ஜனாதிபதி அனுர குமார குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

வாலிபர்களை அடிப்படைவாதத்தில் இருந்து மீட்க தேவையான அனைத்தையும் செய்வோம்.

சூப்பர் முஸ்லிம் என்ற பெயரில் அடிப்படைவாத கோட்பாடு ஒன்று முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாகி வருகிறது என கூறிய அவர் நபிகள் நாயகம் சொல்லாத திரிபுபடுத்தப்பட்ட விடயங்களை கொண்ட அடிப்படைவாத செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என கூறிய அவர் .

அந்த கொள்கை ஆபத்தானது இல்லையா என கேள்வி எழுப்பிய அவர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையில்லையா என கேள்வி எழுப்பினார்.

நாம் நடவடிக்கை எடுக்கிறோம். அது முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை அல்ல. அனைத்து மக்களினதும் நன்மைக்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கு அரசே இது.

அரசினதும் நாட்டு மக்களினதும் நலனுக்க்காக எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களுடனும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான் முஸ்லிம்கள் அரசோடு உள்ளார்கள் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081048

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time