உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சட்டத்தை விட பெற்றோர்–பிள்ளை உறவே போதைப்பொருளிலிருந்து பாதுகாக்கும்: ஜனாதிபதி.!!!

° பெற்றோருக்கு நேரடி விழிப்புணர்வூட்டும் திட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கு பணிப்பு.

போதைப்பொருள் பேரழிவிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதில் சட்ட நடவடிக்கைகளை விட பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பலமான உறவு முக்கியமானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலின் மோசமான தாக்கங்கள் மற்றும் பிள்ளைகளின் நடத்தைகளைக் கண்காணிக்கும் முறைகள் தொடர்பில் பெற்றோருக்கு நேரடி விழிப்புணர்வை வழங்கி, பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் முழுமையான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முறையான செயற்றிட்டமொன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.

தமது பிள்ளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் அபாயம் காணப்படுவதை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்கு நம்பிக்கைக்குரிய நபர் ஒருவரின் பங்களிப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக ஆசிரியர் அல்லது மதத் தலைவரின் உதவி நாடப்படலாம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை கருத்திற்கொண்டு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டலை வழங்கக்கூடிய முறையான செயல்திட்டமொன்றை உருவாக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், இந்தப் பணிக்காக ஆசிரியர்களைப் பயன்படுத்துவதாயின், அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215625

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time