உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலங்கை வந்த தமிழக அமைச்சர் சாஜஹான்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஏ.எம். சாஜஹான் இன்று (14) திங்கட்கிழமை மாலை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்தடைந்த தமிழக அமைச்சர் தலைமையிலான குழுவினரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளரும் முன்னாள் கல்முனை மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அமைச்சர் சாஜஹானுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்றாஹீம், தென்காசி மாவட்டச் செயலாளர் செய்யது பட்டானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பு அணியான மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் சபீக் அஹமட் மற்றும் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல் ஹமீத் ஆகியோரும் இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் மற்றும் குழுவினரின் இலங்கை விஜயம், இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215599

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time