உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலங்கையின் சர்வதேச நிதி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் மூன்றாவது மதிப்பீடு; தயார்நிலை குறித்து ஜனாதிபதி ஆலோசனை.!!!

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

எதிர்வரும் ஒக்டோபர் 26 முதல் நவம்பர் 06, 2026 வரை நடைபெறவுள்ள இந்த மதிப்பீட்டுக்கான தயார்நிலை, இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டங்களை அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்துவதில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு, அவற்றைக் குறைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகள் சர்வதேச தரப்பினரின் அழுத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்படுவது அல்ல என்றும், நாட்டின் நிறுவன கட்டமைப்பையும் தேசிய நலனையும் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளாகக் கருதி அவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மதிப்பீட்டு செயல்முறைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

தொழில்நுட்ப இணக்கப்பாடு தொடர்பான பரிந்துரைகள் மற்றும் செயல்திறன் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தைச் செயற்பாட்டு நிலையில் கொண்டுவருதல், கம்பனிச் சட்டம் மற்றும் அதன் நடைமுறைகளை வலுப்படுத்துதல், நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தாமதங்கள் காணப்பட்டால் அவற்றை உடனடியாகச் சீர்செய்து, எதிர்வரும் மூன்று வாரங்களில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிறுவன அறிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுக்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, மதிப்பீட்டுக்குத் தயாரான நிலையில் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டு செயல்முறை முக்கியமானது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிர பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தப் பணிகளுக்காக கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும உள்ளிட்ட பல அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214787

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time