உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக துஷார இந்துனில் பெர்னாண்டோ பதவியேற்பு.!!!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுபெற்ற எயார் சீஃப் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இன்று (01) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் புதிய ஆணையாளர் நாயகத்தின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய ஆணையாளர் நாயகம் சமய அனுஷ்டானங்கள் மற்றும் ஆசிகளுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் விஹாராதிபதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரும் நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிகளை வழங்கினர்.

மேலும், பதில் ஆணையாளர் நாயகம் தாரக தேவப்ரிய, ஆணையாளர் (அபிவிருத்தி) விஷாகா குமாரகுரு, ஆணையாளர் (விசாரணைகள்) நிமலிகா குமாரி உள்ளிட்ட திணைக்களத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

புதிய ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மேலும் திறம்படவும் விரைவாகவும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215572

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time