உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

அபாயகரமாக வாகனம் ஓட்டுபவர்களை புகார் செய்ய: புதிய ‘WhatsApp’ இலக்கம் அறிமுகம்.!!!

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு வசதியாக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை அனுப்பிவைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீடியோக்களை அனுப்பும் போது சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவு ஆகிய விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை மூலம் அபாயகரமான வாகன ஓட்டங்களை கட்டுப்படுத்தி, வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934450

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time