உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பாணின் எடை குறைத்து விற்பனை; 54 வர்த்தக நிலையங்கள் சிக்கின – 81 பேக்கரிகள் மீது விசாரணை.!!!

நுகர்வோர் செலுத்தும் பணத்திற்கு உரிய நிர்ணயிக்கப்பட்ட எடையுடைய பாணை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் செப்டெம்பர் 01 முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது நாடளாவிய ரீதியில் 118 வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 54 வர்த்தக நிலையங்களில் எடை குறைந்த பாண் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 76 இடங்களில் பாணின் எடை முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. 65 இடங்களில் பாணின் விலை முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. எடை குறைந்த பாண் தொடர்பில் 81 பேக்கரிகள் பின்னோக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எடை குறைந்த பாணை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களில் மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்படாமல், குறித்த பாணை உற்பத்தி செய்த பேக்கரி வரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட எடையின்படி, முழு பாண் 450 கிராமும், அரை பாண் 225 கிராமும் எடையைக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணின் எடை மற்றும் விலை உள்ளிட்ட வர்த்தக முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் குறுந்தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215591

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time