உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

57 முப்படை மூத்த அதிகாரிகளுக்கு “விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கம்.!!!

• ஜனாதிபதி தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு.

முப்படைகளின் மூத்த அதிகாரிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய நீண்டகால சிறப்பான சேவையைப் பாராட்டி வழங்கப்படும் “விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தற்போது சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற 57 மூத்த அதிகாரிகள் ஜனாதிபதியினால் பதக்கமணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

முப்படைகளில் குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை மற்றும் சிறப்பான சேவை வரலாற்றைக் கொண்ட மூத்த அதிகாரிகளுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, கௌரவிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்புக்காக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். யுத்த காலகட்டங்களிலும் இயற்கை அனர்த்தங்களின்போதும் உயிராபத்துகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வலுவான அரச சேவைக்கு தொழில்முறைத் தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சுய ஒழுக்கம் அவசியமானவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பதக்கம் என்பது தனிப்பட்ட கௌரவமாக மட்டுமன்றி, சமூகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பொறுப்பையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் எச். எஸ். சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215625

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time