உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

GovPay அபராத முறை செயல்படுத்தாத பொலிஸாருக்கு எச்சரிக்கை – கடும் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு.!!!

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.

வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கவும், போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் பொதுமக்களின் நேரத்தையும் பொருளாதாரச் செலவுகளையும் சேமிக்கவும், 2025 ஏப்ரலில் GovPay கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அனைத்து ஒன்பது மாகாணங்களிலும் விழிப்புணர்வுத் திட்டமும், இந்த அமைப்பைச் செயல்படுத்தும் பணியும் நிறைவடைந்துள்ளன.

அதேவேளையில், இந்தச் சேவையை எளிதாக்கும் வகையில் லங்காபே மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான போக்குவரத்து அபராதங்களில் சுமார் 12% தற்போது GovPay மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், சில போக்குவரத்து அதிகாரிகள், GovPay அமைப்பு மூலம் பணம் செலுத்துமாறு வாகன சாரதிகள் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரித்து, அதற்குப் பதிலாக அவர்களைக் பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தப் முறைப்பாடுகளை நாங்கள் விசாரித்தபோது, சில அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாதனங்களை எடுத்துச் செல்லத் தவறியதும், சிலரது திறமையின்மை மற்றும் மனப்பான்மை தொடர்பான பிரச்சினைகளும் தெரியவந்துள்ளது.

ஒரு அதிகாரி, தனக்கு அந்த அமைப்புமுறை பற்றித் தெரியாது என்றோ அல்லது அந்த வசதி பயன்பாட்டில் இல்லை என்று கூறினாலோ அது கடமைத் தவறு மற்றும் ஒழுங்கு மீறலாக அமையும்.GovPay மூலம் பணம் செலுத்த அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது 070 4756600 என்ற ஹாட்லைன் மூலம் முறைப்பாடு அளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931330

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time