எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு.!!!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகள் திடீரென அதிகரிக்கப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையின் உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது தொடர்பில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வுப் போக்கை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையில் எரிபொருள் விலைகள் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்பது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.