உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.!!!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நிந்தவூர் பிரதேசத்தில் வாசிப்பு மாத நிகழ்ச்சிகளை சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10) நிந்தவூர் பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகத்தின் வருடாந்த செயற்பாடுகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல், நூலகர் ஏ.சி. அன்வரின் ஒருங்கிணைப்பில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துதல், மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், பாடசாலை மற்றும் சமூக மட்டங்களில் ஆக்கபூர்வமான வாசிப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல், பொது நூலகத்தின் சேவைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலைகளுடன் இணைந்து வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல், மாணவர்களுக்கான வாசிப்பு மற்றும் அறிவுசார் போட்டிகளை ஏற்பாடு செய்தல், நூலகப் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் இளம் தலைமுறையினரிடையே வாசிப்பு கலாசாரத்தை உருவாக்குதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் றியாஸ் ஆதம், ஒரு சமூகத்தின் நிலையான அபிவிருத்திக்கு கல்வியும் வாசிப்பும் முக்கியமான அடித்தளங்களாகும் எனக் குறிப்பிட்டார்.

“வாசிக்கும் சமூகமே அறிவார்ந்த சமூகமாக உருவாகும்” என வலியுறுத்திய அவர், மாணவர்களிடையே சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் பாடசாலைகளும் நூலகமும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

மேலும், நூலக சேவைகளை மேம்படுத்துவதுடன் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே நூலகப் பயன்பாட்டை அதிகரிக்கும் புதிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகளை ஒரு மாத காலத்துக்கு மட்டுப்படுத்தாமல், ஆண்டு முழுவதும் வாசிப்பு மற்றும் அறிவுசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலைகள், நூலகம் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையில் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதன்போது பாடசாலைகளின் கல்வி மற்றும் வாசிப்பு செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் நூலகத்துடன் இணைந்து கல்வி மற்றும் வாசிப்பு சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க பாடசாலை அதிபர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் நிந்தவூர் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், நூலக அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215519

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time