உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவில்; 3,398 பட்டதாரிகளுக்கு மூன்று நாட்களில் பட்டங்கள்.!!!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (25) ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையேற்று பட்டமளிப்பு நிகழ்வுகளை முன்னெடுத்தார். விழாவிற்கான நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டிருந்தார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 3,398 பட்டதாரிகளுக்கு 9 அமர்வுகள் ஊடாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

முதலாம் நாளில் நடைபெற்ற முதல் அமர்வில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

எதிர்வரும் இரண்டு நாட்களிலும் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நிறைவுபெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066971

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time