உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

கல்முனையில் 68ஆவது புதிய அரச ஒசுசல கிளை; ஆதம்பாவா எம்.பி. தலைமையில் திறந்து வைப்பு.!!!

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கல்முனை பிரதேசத்தில் 68ஆவது புதிய அரச ஒசுசல மருந்தகக் கிளை, இன்று செவ்வாய்க்கிழமை (30) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய ஒசுசல கிளையை திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரச ஒசுசல கிளை, கல்முனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேச மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர், வைத்தியர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள், கல்முனை பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 870234

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time