உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

பிரஜா சக்தி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு: உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்.!!!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (06) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுக்களின் தலைவருமான அபூவக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 20 பேர் என்ற வகையில்  சாய்ந்தமருதில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு ஒவ்வொரு பிரிவிலும்  05 பெண்களும் உள்ளடங்குவர்.

இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா,
சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹிட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளின் பிரஜாசக்தி தவிசாளர்கள், செயலாளர்கள்,  சாய்ந்தமருது  சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 870731

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time