உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

மாணவர்களின் கல்வி மற்றும் மார்க்கச் சாதனைகளைப் பாராட்டிய: புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல்.!!!

-எம்.ரி.எம்.யூனுஸ்-

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில், “நாற்பெரும் விழா – 2026” நிகழ்வு நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளிவாயல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, பள்ளிவாயலின் ஹிக்மா பகுதி நேர அல்குர்ஆன் மனன பீடத்தில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர் கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், 2025ஆம் ஆண்டு காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அல்குர்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த பிர்தௌஸ் மத்ரஸா மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும், 2026ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் பள்ளிவாயலில் நடைபெற்ற பெண்களுக்கான விசேட மார்க்க விளக்க வகுப்பு மற்றும் வாலிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A அல்லது 8A பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவ, மாணவிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் MIM. ஜவாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளிவாயலின் பிரதம இமாமும் ஹிக்மா பகுதி நேர அல்குர்ஆன் மனன பீடத்தின் அதிபருமான அஷ்-ஷெய்க் அல்-ஹாபிழ் MMM. இல்ஹாம் (பலாஹி) முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பள்ளிவாயலின் ஆயுட்காலத் தலைவருமான கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஹாபிழ் ASM. பாரூக் (பலாஹி, அஸ்ஹரி) விசேட மார்க்கச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

கல்வி, மார்க்கக் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளைப் பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292520

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time