நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்: பெரும்பான்மை ஆதரவு நிரூபிப்பு.!!!
தமிழ்நாட்டின் முதல்வராக நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்க உள்ளதாகவும், அதற்காக அவர் பெரும்பான்மை ஆதரவை நிரூபித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை நேரம் 2026-05-09 என குறிப்பிடப்பட்டுள்ள சமூக வலைதள செய்திகளின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் மொத்த ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாகவும், 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளை விட அதிகமாக பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து நடிகர் விஜய் விரைவில் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் கூறப்படுகின்றது.
எனினும், இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.