உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக – அயதுல்லா அலிரேசா அராஃபி நியமனம்.!!!

ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அரசியலமைப்பின் 111ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் பதவியில் இல்லாத சூழ்நிலை அல்லது காலமானால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின்னர் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியப் பொறுப்புகள்
அலிரேசா அராஃபி தற்போது:
ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் சபையின் உறுப்பினர், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் தலைவர், நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினர் ஆகிய முக்கியப் பதவிகளை வகித்து வருகிறார்.

போர்ச் சூழலில் முக்கிய முடிவு
போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் நிர்வாகம் மற்றும் இராணுவ கட்டமைப்பைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த நியமனம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இத்தகைய மாற்றம், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810892

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time