உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

கைதிகளின் உடல்கள் இடிபாடுகளுக்குள்; மீட்க சிறப்பு இயந்திரங்கள் தேவை – ஹமாஸ் தெரிவிப்பு.!!!

கட்டிட இடிபாடுகளுக்கு அடியே கைதிகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதால், அவற்றை எடுக்க, சிறப்பு கனரக இயந்திரங்கள் தேவை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் வசம் 28 இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், திங்கட்கிழமை 4 உடல்களும், செவ்வாய் கிழமை 3 உடல்களும், புதன்கிழமை இரவு 2 உடல்கள் என மொத்தம் 9 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உடல்களை ஒப்படைக்க தாமதிக்கிறதற்கு காரணங்கள் உள்ளன என்றும்,உடனடியாக ஆயுதங்களை கீழே வைக்க முடியாத சூழலில் ஹமாஸ்.

இந்நிலையில், ஏன் உடல்களை விரைந்து ஒப்படைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு ஹமாஸ் விளக்கம் அளித்துள்ளது. பல கைதிகள் கட்டிடங்களுக்குள் இருந்த நிலையில், அந்த கட்டிடங்கள் குண்டு வீச்சில் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.

அந்த இடிபாடுகளை அகற்றினால் மட்டுமே அவர்களின் உடல்களை எடுக்க முடியும். அதற்கான கனரக இயந்திரங்கள் காசாவில் இல்லை.

எகிப்து உதவியுடன் சில தொழில்நுட்ப குழுவினரும், இயந்திரங்களும் வர வைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சில உடல்கள் சுரங்கங்களில் உள்ள நிலையில், அவற்றின் மீதும் கட்டிட இடிபாடுகள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றையும் அகற்ற வேண்டும். இதுவே தாமதத்திற்கு காரணம் என ஹமாஸ் கூறியுள்ளது.

இதற்கிடையே ஒரு இஸ்ரேல் கைதியின் உடலை ஒப்படைத்தால், அதற்கு பதிலாக 15 பாலஸ்தீனியர்களின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற ஹமாசின் நிபந்தனையின்படி, இதுவரை 90 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஆக்கிரமிப்பு நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810095

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time