உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு; பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரிக்கை.!!!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையப் பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) மாலை சுமார் 3.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாவியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள மரம் ஒன்றின் கீழ், சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த நபரை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரை தொடர்புகொண்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066870

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time