உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

செயலிழந்த மெகா மின் விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன; கல்முனை மாநகர சபையின் விசேட வேலைத்திட்டம்.!!!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருதுபிரதான வீதியில் கடந்த சில காலமாக செயலிழந்து காணப்பட்ட மெகா மின் விளக்கு தொகுதிகளை புனரமைப்பு செய்து, புதிய மின் விளக்குகள் பொருத்தும் விஷேட வேலைத் திட்டப் பணிகள் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக இந்த விஷேட வேலைத் திட்டமானது அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான நவீன ரக மின் உயர்த்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கல்முனை மாநகர பிரதான வீதி மற்றும்  கல்முனை சிறுவர் பூங்கா என்பவற்றில் நீண்ட காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட மின் விளக்கு தொகுதிகள் கடந்த 02 நாட்கள் இரவு பகலாக மேற்படி மின் உயர்த்தியின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவ்வாறே சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா மற்றும் மருதமுனை சிறுவர் பூங்கா என்பவற்றில் செயலிழந்து காணப்பட்ட மின் விளக்குத் தொகுதிகள் யாவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துரிதமாக புனரமைப்பு  செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066949

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time