உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு அபாய எச்சரிக்கை: சில நாட்களில் 12 பேர் பாதிப்பு.!!! 

229 வீடுகளில் திடீர் சோதனை
30 வீடுகளில் டெங்கு  குடம்பிகள் கண்டுபிடிப்பு.

-ஜே.கே-

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீரென பெய்த மழை ஓய்ந்ததன் காரணமாக சில நாட்களுக்குள் 12  டெங்கு நோயானவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசீர்தீன் தெரிவித்தார்

காத்தான்குடி பிரதேசத்தில் திடீரென இம்மாத ஆரம்பத்திலிருந்து கடந்த சில நாட்களுக்குள் அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இதனை அடுத்து டெங்கு நுளம்புகளை கண்டறியும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து இன்று  (02) இப்பிரதேசத்தில் பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கோண்டன.

229 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது 30 வீடுகளில் டெங்கு குடம்பிகள்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

டெங்கு குடம்பிகள்  உற்பத்தியாகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் சில தினங்களுக்குள் அவற்றை சீர் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்

குறித்த எச்சரிக்கையும் மீறி சுற்றுச்சூழலை டெங்கு குடம்பிகள்  உற்பத்தியாகும் வகையில் வைத்திருந்த சில வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066832

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time