உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு – காத்தான்குடி அஸ்ஸுஹதா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.!!!

– எம்.ரி.எம்.யூனுஸ்-

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (25) வியாழக்கிழமை காத்தான்குடி அஸ்ஸுஹதா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு “உங்கள் பிள்ளைகளை எப்போதும் பாதுகாத்திடுங்கள்” எனும் கருப்பொருளில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜுத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். மாணவர்களுக்கான விழிப்புணர்வு அமர்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ரஹ்மத்துல்லாஹ்  நடத்தி வைத்தார். இதில் டெங்கு நோயின் பரவல் தடுப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, நுளம்பு இனப்பெருக்கம் தடுக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் முனீர், 167C கிராம சேவகர் பிரிவின் பிரஜாசக்தி தலைவர் ஜிப்ரி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.இர்பான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நூர்தீன், கஃபே நிறுவனத்தின் இணைப்பாளர் மீராசாஹிப், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் பாடசாலை வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கண்காணிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வு சமூக மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066886

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time