உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி அபிவிருத்தி தொடர்பில்: அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்தவுடன் ஹிஸ்புல்லா – அஸ்பர் முக்கிய சந்திப்பு; நிதி ஒதுக்கீட்டுக்கு உறுதி.!!!

காத்தான்குடி பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் (JP) ஆகியோர், தொழிலாளர் அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்தவை இன்று (23) நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது, காத்தான்குடி பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், புதிய உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தல், மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் நீண்டகால பொருளாதார, சமூக வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், முன்வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி மக்களின் நலன் மற்றும் பிரதேசத்தின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இச்சந்திப்பு, பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066879

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time