உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

டெங்கு தடுப்பில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – எம்.எஸ். உதுமாலப்பை.!!!

-கே. ஹமிட்-

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை வலியுறுத்தினார்.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டிற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் காரியாலயம், சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், உலமா சபை மற்றும் பல்வேறு பொது அமைப்புகள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலின் கீழ், முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அண்மையில் கல்முனையில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை நடத்தி, பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் முழுவதும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் மக்கள் சார்பில் தனது நன்றியையும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066945

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time