உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கல்முனை மீன் வாடியில் வெடிப்பு சம்பவம்: நால்வர் காயம் – பொலிஸார் விசாரணை.!!!

-பாறுக் ஷிஹான்-

மீன் களஞ்சிய வாடியில் உள்ள  வாயு மீள் நிரப்பும்   பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் கடலோரம் அமைந்துள்ள மீன் களஞ்சிய வாடியில்  வெள்ளிக்கிழமை(26) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பழுதடைந்திருந்த எரிவாயு நிரப்பு நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக வருகை தந்தவர்களே இவ்வனர்த்தத்தில் சிக்கி கொண்டதுடன் சிறு வெடிப்பு காரணமாக அவ்விடத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.

தற்போது படுகாயமடைந்த நால்வரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066889

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time