இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 7.7 மெக்னிடியூட்; கடலோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (15) அதிகாலை 3.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட் ஆக பதிவாகியுள்ளதாக பூகம்பவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கோ அல்லது நாட்டிற்கோ சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களமும் இடர் முகாமைத்துவ நிலையமும் தெரிவித்துள்ளன.
மேலும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.