நடுவானில் அவசர சமிக்ஞை அனுப்பிய Flydubai விமானம்; கடத்தல் சந்தேகத்தால் பரபரப்பு.!!!
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சுமார் 180 பயணிகளுடன் பயணித்த Flydubai பயணிகள் விமானம், நடுவானில் அவசரநிலை சமிக்ஞையை அனுப்பியதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானக் கடத்தலைக் குறிக்கும் ‘7500’ அவசர குறியீடு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விமானம் சவூதி அரேபியா நோக்கி திருப்பப்பட்டதாகவும், இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்பினரால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விமானம் உண்மையில் கடத்தப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அவசர குறியீடு அனுப்பப்பட்டதற்கான காரணம் மற்றும் விமானத்தின் பாதை மாற்றப்பட்டதற்கான சூழ்நிலைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
