உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி காலமானார்.!!!

நவீன கத்தாரின் சிற்பி எனப் போற்றப்படும் கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி அவர்கள் காலமானதாக கத்தார் அமீரி திவான் (Amiri Diwan) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

74 வயதான அவர், 1995 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கத்தார் நாட்டின் அமீராகப் பதவி வகித்து, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் சர்வதேச முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.

அவரது ஆட்சிக் காலத்தில் கத்தார் உலக அரங்கில் தனித்துவமான இடத்தைப் பெற்றதுடன், உலகப் புகழ்பெற்ற அல் ஜசீரா ஊடக வலையமைப்பின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது. மேலும், கத்தாரை உலகளாவிய முதலீடு, கல்வி, விளையாட்டு மற்றும் இராஜதந்திர மையமாக மாற்றுவதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானியின் மறைவு கத்தார் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், கத்தார் மக்களுக்கும் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066931

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time