உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

வீதியில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் – சுகாதார அச்சத்தில் மக்கள் அவதி.!!!

-பாறுக் ஷிஹான்-

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்கள்களால் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக  செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி வருகின்றன.

மேலும் குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில்  பியர் ரின்கள், பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் காணியில் தேங்கி நிற்கின்ற குப்பைகளில் நீர் நிலை தேங்குவதனால் டெங்கு போன்ற நோய்களும் பரவுவதற்கு காரணமாக அமைகின்றது.

மேலும்  கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பை கூழங்கள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன. அத்துடன்  இப்பகுதியில் நாய்கள் மாடுகள் காகங்கள் குப்பைகளை உண்பதுடன் இதனால் அயலில் உள்ள கிணறுகள் கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.

கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871478

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time