காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அங்குரார்ப்பணம் – கோடிக்கணக்கான நிதியில் பணிகள் ஆரம்பம்.!!!
–எம்.ரி.எம்.யூனுஸ்–
2026ம் ஆண்டுக்கான மாகாண சபை PSDG நிதி மற்றும் காத்தான்குடி நகரசபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று (24) நடைபெற்றநடைபெற்றது.
இதன்படி, 3.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அன்வர் பாலர் பாடசாலை வீதியில் 175 மீற்றர் நீள வடிகான் அமைக்கும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நகரசபை உறுப்பினர் எம்.எச்.எம். றிஸ்வி தலைமையில் இடம்பெற்றது.
அதேவேளை, 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முறிவு வைத்தியர் வீதியில் கொங்கிரீட் வீதி அமைக்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நகரசபை உறுப்பினர் எம்.ஏ.சி. ஹம்தூன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், காத்தான்குடி நகரசபையின் 0.62 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான வீதியில் வடிகான் அமைக்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் நடைபெற்றது.
இதேநேரம், 5.0 மில்லியன் ரூபாய் மாகாண சபை PSDG நிதி ஒதுக்கீட்டில் கோழிக்காரன் வீதி (மர்ஹூம் தாவூத் வீதி) பகுதியில் 250 மீற்றர் நீள வடிகான் அமைக்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன், 4.0 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடற்கரை வீதியில் அமர்வு வசதியுடன் கூடிய கடைகள் அமைக்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் நகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். அஜ்வத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் கலந்து கொண்டதுடன், நகரசபை உறுப்பினர்கள், நகரசபை கணக்காளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும், பிரதேச அபிவிருத்திக்கு இது பெரும் பங்களிப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



























