ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்கா எச்சரிக்கை – ஈரான் நையாண்டி பதில்.!!!
மத்திய கிழக்கு கடல் வர்த்தகத்தில் முக்கியமான வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்கேரியாவில் உள்ள ஈரான் தூதரகம் சமூக வலைத்தளமான X தளத்தில் பதிலளித்து அமெரிக்காவை நையாண்டி செய்துள்ளது.
அந்த பதிவில்,
“நீங்கள் கெஞ்சுவது பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், (நீரிணையின்) சாவி இன்னும் எங்கள் பாக்கெட்டில்தான் இருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தின் மூலம், ஹார்முஸ் நீரிணை மீது முழுமையான கட்டுப்பாடு தங்களிடம் இருப்பதாகவும், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஈரான் அஞ்சப்போவதில்லை என்பதையும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் எண்ணெய் மற்றும் சர்வதேச வர்த்தக போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள இந்த விவகாரம், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.