உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால் இந்தியா மட்டும் துபாய்க்கு சென்று போட்டிகளை விளையாடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டில் போட்டிகளை நடத்துவதற்காக அங்கு இருக்கும் முக்கிய மைதானங்கள் புனரமைக்கப்படுகிறது. இதில் கராச்சி கிரிக்கெட் மைதானம் நல்ல நிலையில் இருக்கிறது. ராவில் பிண்டி மற்றும் லாகூர் கிரிக்கெட் மைதானங்களை நவீன ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மைதானங்கள் இன்னும் முழுமையாக வில்லை. இதனால் ஐசிசி கொடுத்த கெடுவையும் தாண்டி பாகிஸ்தான் மைதான கட்டுமான பணிகளை இதுவரை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராவல்பிண்டிய மைதானத்தின் இருக்கைகள் மாற்றும் பணி நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது.
லாகூர் கடாபி மைதானத்தில் 98 சதவீத பணிகள் முடிவடைந்து இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை கடைசிக் கட்டத்தில் வேறு நாட்டுக்கு மாற்ற முடியாது என்றும் ஐசிசி நிர்வாகிகள் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்திருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்காவில் நடைபெற்ற போது ஐசிசிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெற்றிகரமாக நடாத்த வேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையை அதிரடியாக icc குறைத்து இருக்கிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் இம்முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805864

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time