“சாவியை வேண்டுமெனில் லெபனானில் வந்து வாங்குங்கள்” – ட்ரம்புக்கு ஈரானின் நையாண்டி செய்தி.!!!
சர்வதேச அரசியல் சூழல் பதற்றமாக நிலவி வரும் நிலையில், ஈரான் தனது நையாண்டி கலந்த இராஜதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு சுவாரஸ்யமான செய்தியை வெளியிட்டுள்ளது.
பல்கேரியாவில் அமைந்துள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட இந்த குறும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான கடல் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் “சாவி” தற்போது லெபனான் கைகளில் இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் லெபனான் விவகாரத்தில் ஈரான் தனது நிலைப்பாட்டை தளர்த்தவில்லை என்பதைக் குறிக்கும் வகையிலேயே இந்த நகைச்சுவை கலந்த அரசியல் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.