உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

பங்களாதேஷை வீழ்த்தி – ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா.!!!

நடப்பு ஆசிய கிண்த் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் பங்களாதேஷை 41 ஓட்டங்களில் வீழ்த்தியது இந்தியா.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பங்களாதேஷ் விரட்டியது. அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது சைப் ஹசன் ஆட்டம்தான். அவர் 51 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார். பர்வேஸ், 21 ஓட்டங்கள் எடுத்தார்.

அவர்களை தவிர மற்ற அனைத்து துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 19.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் 3, வருண் மற்றும் பும்ரா தலா 2, அக்சர் மற்றும் திலக் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 77 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிஷாத் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து கில் வெளியேறினார்.

மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஷிவம் துபே, 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் ரிஷாத் கைப்பற்றினார். 37 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்த அபிஷேக் சர்மா, ரன் அவுட் ஆனார். அது இந்த ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மாவும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

6-விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்டியாவும், அக்சர் படேலும் 39 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஹர்திக் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அக்சர் 10 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929724

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time