ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு பிராந்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் – ஈரான் வலியுறுத்தல்.!!!
ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளுக்கு பிராந்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் எங்களுக்கு ஏற்படுத்திய சேதங்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். கடந்த காலத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது. ஒவ்வொரு கூட்டத்திலும் எங்களது கோரிக்கைகளைத் தீவிரமாக முன்வைத்துள்ளோம். இனியும் அவ்வாறே தொடர்ந்து செயற்படுவோம்.
யெமனில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள், அந்நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிவிட்டதற்கான அறிகுறியாகும். இந்த விடயத்தை ஒருதலைப்பட்சமாக அணுக முடியாது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அநீதியான முற்றுகையையும் புறக்கணிக்கக் கூடாது.
எந்தவொரு பேச்சுவார்த்தை அல்லது அமைதியான தீர்வுக்கான முயற்சியிலும் அமெரிக்காவே மிகப்பெரிய தலையீட்டாளராகவும் இடையூறு ஏற்படுத்துபவராகவும் இருந்து வருகிறது.
ஈரான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம், நிலைமையை மேலும் சீர்குலைத்து, இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.