உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி கடற்கரையில் இரவு வேளையில் நாய்களின் தொல்லை.!!!

● ஓய்வைக் கழிக்க வருவோர் அச்சம்; உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

-எம்.ரி.எம்.யூனுஸ்-

காத்தான்குடி கடற்கரைக்கு இரவு நேரங்களில் ஓய்வைக் கழிக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், குடும்பத்தினருடன் வருகை தரவும் வரும் பொதுமக்கள் தெருநாய்களின் அதிகரித்த நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டமாகச் சுற்றித்திரியும் நாய்கள், கடற்கரைக்கு வருவோரை துரத்தும் சம்பவங்களும் இடம்பெறுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரை பகுதிக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066933

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time