காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் 4ஆவது இரத்ததான முகாம்; 237 பேர் குருதி தானம், வைத்தியர் அலீமா ரஹ்மான் கௌரவிப்பு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் நான்காவது இரத்ததான முகாம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மினா கடற்கரை மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.எச்.எஸ். ஹமீட் தலைமையில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமில் 237 பேர் தன்னார்வத்துடன் குருதியை தானமாக வழங்கியதுடன், காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் அலீமா ரஹ்மான் மற்றும் இரத்தக் கொடையாளர்கள் சம்மேளனத்தினருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் இரத்தத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குமான நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள், இரத்தக் கொடையாளர்கள் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ் இரத்ததான முகாமில் அதிகளவிளான இளைஞர், யுவதிகள் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு இரத்தத்தினை தானமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
























