உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

மரணத்திற்குப் பின்னரும் இரு உயிர்களுக்கு வாழ்வு; மன்னார் வைத்தியசாலையில் முதன்முறையாக உறுப்பு தானம்.!!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நோயாளியின் குடும்பத்தினர், “எங்கள் அன்புக்குரியவர் இல்லாவிட்டாலும், அவரது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழ வேண்டும்” என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவருக்கும் புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உறுப்பு மாற்று நடவடிக்கை நேற்று (02) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள இந்த முதலாவது உறுப்பு தான நடவடிக்கை, உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் மனிதநேயத்தின் உயர்வையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214781

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time