உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 21, 2026

Hot News

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் மலசல கூட விவகாரம்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன் முகநூல் பதிவுக்கு நிர்வாக சபை விளக்கம்.!!!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ULM.முபீன் சேர் அவர்களினால் முகநூலில் எழுதப்பட்ட மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் விடயங்கள் தொடர்பாக.

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் மலசல கூடம் தொடர்பாக முகநூலில் எழுதப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. கடந்த ஒரு மாத காலமாக பள்ளிவாயல் புதிய கட்டிடம் அமைப்பதற்கான பல்வேறு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தாங்கள் பள்ளிவாயலுக்கு வருகை தந்து மலசல கூடத்தை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டுள்ளீர்கள். இவ்வாறு பதிவிடுவதற்கு முன்னர் உரிய நிர்வாக சபையிடம் இது தொடர்பான விளக்கங்களை கோரியிருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

சுனாமி பேரலையின் பின்னர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட எமது பள்ளிவாயல் பல தனவந்தர்களின் உதவியோடு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றுவரை இயங்கி வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளிடம் பள்ளிவாயல் புதிய கட்டிடம் சம்பந்தமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவை தொடர்பாக கவனத்திற் கொள்ளப்படாமை காரணமாக வருமானம் குறைந்த பள்ளியாக காணப்படுவதனாலும் புதிய பள்ளிவாயல் கட்டடம் மற்றும் மலசல கூட வசதிகளை மேம்படுத்த முடியாமல் போனது.

இருந்தபோதிலும் தற்போதுள்ள நிர்வாகத்தினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் பலனாக மர்ஹும் நஜீம் ஹாஜியார் அவர்களுடைய மகன் புதிய பள்ளிவாயல் கீழ் தளத்தினை பூர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் பெயரில் தற்போது கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் பள்ளிவாயல் பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குளியலறை வசதிகளுடன் கொண்ட மலசல கூடம் அமைக்கப்பட வேண்டும் என தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் பள்ளிவாயல்கள் என்பது தொழுகைக்காக வருகின்ற மக்கள் வுழு செய்வதற்காகவும் தங்களது இயற்கை தேவைகளை நிறைவு செய்வதற்காகவுமே தவிர சுற்றுலா பயணிகள் அல்லது அவசர தேவைக்காக பள்ளிவாசல் மலசல கூட்டத்தை பயன்படுத்துவது பொருத்தமான விடயமாக எதிர்பார்க்க முடியாது.

சுற்றுலா பயணிகளுக்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியது காத்தான்குடி நகர சபையே அவ்வாறான திட்டத்தை காத்தான்குடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போதிலும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றமையினால் அவை பாவிக்கப்படாமல் பள்ளிவாயல் மலசல கூடத்தையே நாடுகின்றனர். இதனால் பாவணையாளர்கள் அதிகரித்தமையினாலும், பொறுப்பற்ற முறையில் பொதுமக்கள் மண், கல், பம்பஸ் மற்றும் உள்ளாடைகள் போன்ற பொருட்களை மலசல கூடங்களில் வீசிவிட்டுச் செல்வதனாலும் மலசலகூடத்தை துப்புரவு செய்வதில் நிர்வாகம் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மூன்று மலசல கூடங்களை நிரந்தரமாக மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது புதிய பள்ளிவாயல் கட்டடம் மற்றும் மலசல கூடம் என்பன புதிதாக அமைக்கப்படவுள்ள நிலையில் காணப்படுகின்ற பெண்கள் பள்ளிவாயல் மற்றும் அதனுடன் இணைந்த மலசல கூடத்தை தாங்கள் குறிப்பிட்டது போன்று அமைத்து தருவதற்கு முன் வந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நிர்வாக சபை என்றும் தயாராக உள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

நிருவாக சபை
மஸ்ஜிதுல் அன்வர்
புதிய காத்தான்குடி


பகிரங்க வேண்டுகோள்

மஸ்ஜிதுல் அன்வர் கடற்கரை பள்ளிவாயலில் குளிக்கும் வசதியுடன் கூடிய மலசல கூட கட்டடத் தொகுதியின் அவசர அவசியம்

U.L.M.N.முபீன்

காத்தான்குடி கடற்கரைக்கு இன்று வெளியூர்களில் இருந்து அதிக மக்கள் வருகை தருகின்றார்கள்.

இவர்களில் பலர் சாதாரண வருமானம் மட்டும் கொண்ட பட்ஜெட் சுற்றுலாவை மையப்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு காத்தான்குடி கடற்கரையில் உள்ளூர் மக்களும் தங்களது மிகப்பெரும் பொழுதுபோக்கு பிரதேசமாக காத்தான்குடி கடற்கரையை பயன்படுத்துகின்றனர்.

மேற்படி வருகை தரும் மக்களுக்கான வசதிகள் போதாமல் இருப்பது மிகவும் பெரிய குறைபாடாகும்

கடற்கரைக்கு வரும் மக்கள் தொழுகைக்காகவும் மற்றும் தங்கள் இயற்கை கடனை கழிக்கும் பிரதான தளமாக கடற்கரைமஸ்ஜிதுல் அன்வர் காணப்படுகிறது.

மேற்படி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் மலசல கூடம் முற்றாக பழுதடைந்து உள்ளது.

இப்பள்ளி வாயலில் மிக அவசரமாக ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் குளிக்கும் வசதியுடன் கூடிய மலசல கூட தொகுதிகள் இரண்டு அமைக்கப்பட வேண்டும்.

பள்ளிவாயலின் மலசல கூடம் மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு அப்பள்ளிவாயில் மிகச் சிறிய அளவில் இருந்த போது கட்டப்பட்டது. அது இப்போது முற்றாக சிதைவடைந்திருக்கிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிவாயலில் மலசல கொடுத்து தரிசிப்பதற்கான ஒரு களப்பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.

பள்ளிவாயலில் சலகூடங்கள் மூடப்பட்டு அங்கே இருக்கிற ஒரே ஒரு மலசல கூடத்தை பாவிக்குமாறு அறிவித்தல் வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி பள்ளிவாயலில் மலசல கூடத்தை புனரமைக்க பள்ளிவாயல் நிர்வாகிகள் சில வேளைகளில் ஆலோசித்து இருக்கக்கூடும்.

ஆனால் தற்பொழுது நமது கடற்கரைக்கு வரும் உள்ளூர் வெளியூர் மக்களின் அதிக அளவிலான வருகையை கவனத்தில் கொண்டு ஒரு பூரணத்துவமிக்க ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் குளிக்கும் வசதியுடன் கூடிய இரண்டு மலசல கூட தொகுதிகள் கட்டப்பட வேண்டியது மிக அவசியமும் அவசரமான பணியாக இருக்கிறது.

அத்தோடு கடற்கரையில் முதன்முதலாக பெண்களுக்கான தொழுகை அறையை 2007 ஆம் ஆண்டு நான் நகர சபை தலைவராக இருந்தபோது அன்வர் பள்ளி வாயிலில் ஒன்றும் மரியம் பள்ளிவாயலில் ஒன்றுமாக இரண்டு அமைத்தேன். அது அப்போதையே தேவைக்கு ஏற்ப ஒரு சிறிய அறையாகவே அமைக்கப்பட்டது.

தற்பொழுது கடற்கரைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பெண்களுக்கான தொழுகை யாரையும் விசாலமாக கட்டப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய நிலையில் நான் மேல் முன்மொழிந்த மலசல கூட கட்டடத் தொகுதிகள் மிக அவசரமாக செய்யப்பட வேண்டியவை.

மேற்படி விடயத்தில் பள்ளிவாயல் நிர்வாகம் கரிசனை எடுக்க வேண்டுமென அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தப் பதிவை நான் இங்கு பகிரங்கமாக முன் வைப்பதன் காரணம் நமது ஊரிலேயே பொதுத் தேவைகளுக்கு தங்கள் செல்வத்தை அள்ளி வழங்குகின்ற தனவந்தர்கள் பரோபகாரிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.

அவர்களின் கொடையினாலேயே நமது ஊரின் பல நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

நமது ஊரின் செல்வந்த தனவந்தர்களை முறையான ஆவணங்களுடன் முறைப்படி அணுகினால் இந்த வேலை மிக இலகுவாக செய்ய முடியும்.

பள்ளிவாயல் விரும்பினால் தங்களோடு இப்பணியில் நானும் இணைந்து செயற்பட ஆவலாக உள்ளேன்.

சதத்துக்குள் ஜாரியாவான நிரந்தர தர்மத்துக்கு நமது ஊரின் தனவந்தர்கள் நிச்சயம் உதவுவார்கள்.

இவ்வாறான ஒரு மலசல கூட தொகுதி பள்ளிவாயலில் அமைந்தால் அதனை முறையாக பராமரிப்பதற்கு அதன் துப்புயவை உறுதிப்படுத்துவதற்கும் பள்ளிவாயலால் பாவனையாளர்களிடமிருந்து கட்டணத்தை அறவிட முடியும்.

இது பள்ளிவாயலுக்கும் வருமானத்தை கொண்டு வரும்.

இன்ஷா அல்லாஹ் அனைவரும் கைகோர்த்து இந்த நல்ல பணியில் அல்லாஹ்வுக்காக ஈடுபடுவோம்.

நமது நல்ல எண்ணங்களை அல்லாஹ் அங்கீகரிப்பானாக ஆமீன்

அன்புடன்
U. L. M. N. முபீன்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 896658

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time