உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

இளம் தலைமுறையை காக்க பள்ளிவாசலின் சட்டப் போராட்டம் வெற்றி; போதை வியாபாரிகளுக்கு தண்டனை.!!!

நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு, மதஸ்தலத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரு எதிராளிகளுக்கு தலா ரூ.1,500 அபராதமும், 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பகுதியில் இடம்பெற்று வந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகமும் பேஷ் இமாமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவற்றை பொருட்படுத்தாத சிலர், பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும் பேஷ் இமாமுடனும் தொடர்ச்சியாக மோதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதன் உச்சக்கட்டமாக, 2024 ஆகஸ்ட் 23 ஆம் திகதி இஷா தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பள்ளிவாசல் வளாகத்திற்குள் பட்டாசு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுடன், தொழுகை முடிந்து வெளியே வந்த மஹல்லாவாசிகளுடனும் குறித்த குழுவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பள்ளிவாசல் பேஷ் இமாம் மற்றும் நிர்வாக சபையினர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சுமார் மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு உட்பட்டிருந்த இந்த வழக்கின் இறுதியில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததுடன், தலா ரூ.1,500 அபராதமும் 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

இந்த வழக்கில் பள்ளிவாசல் சார்பில் ஏ.அஸீஸ், ஏ.றமுழான், பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.பஷீர் மற்றும் பேஷ் இமாம் அல்ஹாபிழ் மௌலவி ஏ.பீ.எம்.ஷிம்லி ஆகியோர் வழக்கை இறுதிவரை முன்னெடுத்து சென்றுள்ளனர்.

நிந்தவூரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று போதைப்பொருளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்றுள்ள முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

இதனிடையே, இளம் தலைமுறையினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல், இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை கண்காணித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தல், மேலும் மாணவர்களுக்கான சுயகற்றல் நிலையம் (Self-Study Center) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் விரைவில் பள்ளிவாசல் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066995

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time