உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பின் அபிவிருத்தி, மக்கள் பிரச்சினைகள் குறித்து; கிழக்கு மாகாண ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு முக்கிய சந்திப்பு.!!!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகரவை இன்று (17) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக, சில உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் நலன்களை விட அரசியல் நோக்கங்களுக்கே முன்னுரிமை வழங்கி செயற்படுவதாகவும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாக நிதி, அரச சொத்துகள் மற்றும் நிறுவன வாகனங்கள் வீணடிக்கப்படுவதாகவும், கடமைப் பொறுப்பின்றி சம்பளம் பெறும் நிலைமைகள் காணப்படுவதாகவும் மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக எம்.பி. தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கடமைப் பகிர்வு, பணிநேரம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும், சில உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் அரசியல் சார்புகளை முன்னிறுத்தி செயற்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மாவட்டத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பாடசாலைகளின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தல், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சுகாதாரத் துறையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வைத்தியசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து, மக்களின் அடிப்படை சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விவசாயம், மீன்பிடி, சிறுகைத்தொழில் போன்ற துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கிராமப்புற வீதிகள் அபிவிருத்தி, வடிகால் அமைப்புகள், சுத்தமான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய கிழக்கு மாகாண ஆளுநர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மாகாண மட்டத்தில் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, மக்கள் சுபீட்சமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066948

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time