காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்வு.!!!
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் 1448 ஆம் ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு, முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் நிகழ்வு நேற்று (17) சிறப்பாக நடைபெற்றது.
முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பாடசாலையில் இரு பிரிவுகளாக நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, தரம் 6, 7, 8 மற்றும் 9 மாணவர்களுக்கான நிகழ்வு பாடசாலை கூட்ட மண்டபத்தில் மெளலவி ACHM. பெளசுல் அமீன் (ஜமாலி) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்ஹாபிழ் மெளலவி MSM. முபாறக் (றியாழி) MA அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அதேவேளை, தரம் 10, 11 மற்றும் உயர்தர மாணவர்களுக்கான நிகழ்வு மஸ்ஜிதுல் ஹுதா சின்னப்பள்ளி வளாகத்தில் அல்ஹாபிழ் மெளலவி SHM. றமீஸ் (ஜமாலி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அல்ஹாபிழ் மெளலவி MIM. ஜவாஹிர் (பலாஹி) BA அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில் மாணவர்களின் கலை மற்றும் சமய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பாடசாலை அதிபர் எம்.பீ.எம். றபீக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












