சர்வதேச பால் தினத்தை முன்னிட்டு: மட்டக்களப்பில் 4,500 பேருக்கு பால் வழங்கல்!!!
-ஜே.கே-
சர்வதேச பால் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது பிஎஸ்டிஜி (PSDG) வேலைத்திட்டத்திற்கு அமைய பொதுமக்களிடையே விலங்குணவான பால், முட்டை மற்றும் இறைச்சி நுகர்வை ஊக்குவிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அறநெறி பாடசாலைகள், பொது இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 4500 பேருக்கு பால் வினியோகிக்கப்பட்டன.
இதற்கமைவாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் சுல்பிகார் அபூபக்கரின் ஆலோசனைக்கு அமைய காத்தான்குடி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தூய திரவப்பால் வழங்கும் வேலைத்திட்டம் காத்தான்குடி அஷ்ஷூஹதா வித்தியாலயத்தில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.
கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் மர்யா ஹர்ஷினி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் பொதுச்சகாதார பரிசோதகர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தாகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேநேரம் பசும் பால் அருந்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.















