உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

“சொந்தமாக இருக்க இடம்” திட்டம்: மட்டக்களப்பில் 47 பயனாளிகளுக்கு வீடமைப்பு நிதி வழங்கல்.!!!

தேசிய வீட்டு வசதி வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு நிதி உதவித் திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

“சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தங்களுக்கென சொந்த வீடுகளை அமைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 872997

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time