உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு; 10க்கும் மேற்பட்டோர் காயம்.!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று (28) வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பள்ளிவாசலில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலீஸார் விரைந்து சென்று பள்ளிவாசல் வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810672

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time