உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி: மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்.!!!

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று (18) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம்” என்ற கோஷத்தை முன்வைத்து, தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும், தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து உண்மைகளும் வெளிக்கொணரப்பட வேண்டும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066866

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time