பிள்ளையான் ஜூலை 13 வரை விளக்கமறியலில்: மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு.!!!
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் கீழ் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.