18ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி வந்தார் புடின்.!!!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 18ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தியாவின் புதுடெல்லியை வந்தடைந்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி புடினை இந்திய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
உலகின் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான BRICS அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டின்போது BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
